எனது தமிழாசான் திரு.எ.த.ஜெயரஞ்சித் அவர்கள் உலக ஆசிரியர் தினத்தையொட்டி எழுதிய கவிதை இதோ!
ஆசிரியராக….
ஏடு தொடக்கியது முதல்ஏணியாக இருந்து ஏற்றம் கண்டு பாடை ஏறும்வரைபவனிவருவது யார்?
அண்டத்திலேஅகில உலகையும்ஆளவைத்துபிணமாகக் கிடந்துபிண்டம் வைக்கும்வரை எமைப் பின்தொடர்ந்ததும் யார்?
முழுவதும் அறிந்த முழுமுதற் கடவுளாம்மூத்த சிவனும்முருகனிடம் கேட்டாரே பாடம்இதுவே நமக்கும் பாடம்!
இரவும் பகலும் சூரியனுக்கில்லைவரவும் செலவும் காற்றுக்கில்லைதுறவும் துய்ப்பும் மரங்களுக்கில்லைஇறப்பும் பிறப்பும் எங்களுக்கில்லை!
தேங்காய் தின்றால் சிரட்டைகள் மிச்சம்!மாங்காய் தின்றால் மாங்கொட்டைகள் மிச்சம்!தீங்குகள் செய்தால் பெருந்தீங்கே மிச்சம்!நன்மைகள் செய்தால் பெரும் நன்மையே மிச்சம்!
நித்தியத்தில் இருபேரும் கலந்துபோவோம்நீ யாரோ? நான் யாரோ? மறந்து போவோம்!புத்துலகம் நாம்தேடி பறந்துபோவோம்!புவியீர்ப்பு மையத்தை கடந்து போவோம்!பிரபஞ்சம் அழிகையிலே சேர்ந்து போவோம்!
ஒரு நல்ல குரு கிடைத்தால்சொர்க்கத்தின் கதவு திறந்திருக்கும்நரகத்தின் வாசல் மூடப்படும்.ஒவ்வொரு நாளும் நகரும்போது – நீஎதிர்காலத்துக்குள் எட்டு வைக்கின்றாய்!
ஆசிரியர் என்போர் எத்தனை அற்புதம்!எத்தனை சுகம்!இறந்த காலம் மீண்டும்மலர்ந்த காலமாகும்!ஆசிரியர் என்பது எவ்வளவு சௌகரியம்!அதோ அறிவியல் அருகினிலே!இதோ அழகியல் அம்பலத்திலே!நம் அறையில் உலக மொழிக்காரர்!என்னருகில் எவரில்லை?...உன்னவரும் நாம்தானேஎன்னவரும் நீர்தானே!...
கண்ணுச்சாமியின் கல்வெட்டுக்களும்காணாமல் போகலாம்!..உயர்கல்வி பெற்ற எங்கள் எழுத்துக்கள் அழிவதில்லை!நாம் இலக்கியத்திற்கு இசைகூட்டியபோது காற்று கைகட்டி நிற்குமையா!நம் உச்சரிப்புக்களால்உங்களுக்கு – பின்புநச்சரிப்புக்கள் வாராது!இலக்கணம் வேப்பங்காய்தான் ஆனால் எங்களால்தானே வேப்பங்காயில் பஞ்சாமிர்தம் செய்ய முடியும்!...
கபிலன் முதல் கணனி வரைகண்டதெல்லாம் கொண்டுவந்தோம்வல்லினம் மெல்லினம்சொல்லித் தந்தோம் - இனி‘ஆயுத’ எழுத்தையும் – அதிகம்சொல்ல வேண்டும்!
சில குருக்கள்சாலையோரப் பெண்கள்ரசிக்கலாம் பின்பற்ற முடியாது!சில குருக்கள் கண்ணாடிகள்நித்தம் இருமுறையாவது பார்க்க வேண்டும்சில குருக்கள் மலைகள்பார்க்கலாம் பெயர்க்க முடியாது!சில குருக்கள் பணநோட்டுக்கள்எப்போதும் எம்மோடிருக்க வேண்டும்!சில குருக்கள் ஏணிகள் தன்னை விட்டுஉன்னைச் செலுத்துவர்!சில குருக்கள் தோணிகள்தன்னையும் செலுத்தி உன்னையும் செலுத்துவர்!
மொத்தத்தில், ஆசிரியர்கள் மரங்கள்!அவர்கள் அகிலத்துக்கு உரங்கள்!விஞ்ஞானத்தால் விண்ணுக்குதூண்டில்போடும் கிளைகள்!சிரிப்பை ஊற்றிவைத்த இலைகள்!உயிர்தரும் மருத்துவ மலர்கள்!பலம்தரும் ஆணிவேர்கள்!இருக்கும்வரை பூத்திருப்பர்!இறக்கும்வரை காய்த்திருப்பர்!வழுக்கை விழுந்தாலும்வாழ்வோரை வாழவைப்பர்!
நீங்கள் சலவை செய்யப்படுவது எங்களால்தான்!உங்கள் அழுக்குகளை நீக்குவதால்சலவைக்கட்டிகளாகிய நாம் தூர்வையாகிப் போகின்றோம்!மரமாகிய நாம் இல்லையேல்!கல்வி மழைக்காகஎங்கே போய் மனுச்செய்வீர்!மாணவரே மனிதராக வேண்டுமா?எம்போன்ற மரத்திடம் வா!பகுத்தறிவாளராக வேண்டுமா?பயனுள்ள மரத்திடம் வா!பண்பாளராக வேண்டுமா?பண்பட்ட மரத்திடம் வா!ஒவ்வொரு மரமும்போதிக்கும் மரம்தான்!மரணித்த பின்பும்பயன்பட்டு நிற்கும்பயனுள்ள மரம்தான்!....
- உணர்வுகள் . எ.த.ஜெயரஞ்சித்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment